பேஸ்புக்கில் பண மோசடியில் ஈடுபட்ட 19 வயதுடைய இளைஞர் கைது

பேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலன்னறுவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலன்னறுவ வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் பல நபர்களின் பேஸ்புக் கணக்கிற்குள் பிரவேசித்து ​அவர்களின் பேஸ்புக் நண்பர்களிடம் ஈசி கேஷ் முறை ஊடாக பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

கம்புராபொல, முனமல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர் இன்று மானம்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக்கில் பண மோசடியில் ஈடுபட்ட 19 வயதுடைய இளைஞர் கைது பேஸ்புக்கில் பண மோசடியில் ஈடுபட்ட 19 வயதுடைய இளைஞர் கைது Reviewed by Vanni Express News on 5/10/2018 12:24:00 PM Rating: 5