ஒரு மாதகாலத்திற்கு பேஸ்புக் தடை ?

பேஸ்புக் சமூக வலைத்தளத்தை ஒரு மாதக்காலம் தடை செய்ய பப்புவா நியூ கினி இராச்சியம் தீர்மானித்துள்ளது.

விசேடமாக உள்நாட்டு தகவல்கள் பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள்,போலியான கணக்கு உரிமையாளர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல்,குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக பேஸ்புக் சமூகவலைத்தளத்தை ஒத்த சமூக வலைத்தளமொன்றை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மாதகாலத்திற்கு பேஸ்புக் தடை ? ஒரு மாதகாலத்திற்கு பேஸ்புக் தடை ? Reviewed by Vanni Express News on 5/30/2018 02:49:00 PM Rating: 5