இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்

-க.கிஷாந்தன்

தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு அருகில் இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் மற்றும் வாய் தர்க்க சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை நுவரெலியாவில் இ.தொ.காவின் மேதினம் இடம்பெற்றது.

இதன்போது ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற இ.தொ.கா ஆதரவாளர்கள் அடங்கிய பேரூந்தில் உள்ளவர்கள் கோஷமிட்டதாகவும், இதனை எதிர்த்து த.மு.கூட்டணியின் ஆதரவாளர்கள் சிலர் அவர்களை மறைத்து வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதால் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவத்தை அறிந்த கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து இரு கட்சியினர்களுக்கிடையில் இடம்பெறவிருந்த பாரிய மோதலை தடுத்து சுமூக நிலைக்கு கொண்டு வந்தனர்.
இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் Reviewed by Vanni Express News on 5/07/2018 11:08:00 PM Rating: 5