ஹமீதியாஸ் ஆடை நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து

இரத்மலான பொருபஹனயில் பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தெஹிவளை மற்றும் மொரட்டுவ தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இரத்மலான பொருபஹனயில் அமைந்துள்ள ஹமீதியாஸ் ஆடை நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் இவ்வாறானதொரு தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ அணைக்கும் முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹமீதியாஸ் ஆடை நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து ஹமீதியாஸ் ஆடை நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து Reviewed by Vanni Express News on 5/12/2018 05:33:00 PM Rating: 5