ஆடை வியாபார நிலையமொன்றில் திடீர் தீ விபத்துடன் வெடிப்பு சம்பவம்

கொலன்ன, புளதொட சந்தியில் உள்ள ஆடை வியாபார நிலையமொன்றில் திடீர் தீ விபத்துடன் வெடிப்பு சம்பவம் ஒன்றும் இடம்பெற்றள்ளது.

நேற்று (06) இரவு 9.30 மணியளவில் ஆடை தைத்து விற்பனை செய்யும் வியாபார நிலையமொன்றில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

தீவிபத்தினால் ஆடை வியாபார நிலையத்தின் உரிமையாளர் காயமடைந்து சூரியகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீ விபத்துடன் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் ஆடை வியாபார நிலையத்திற்கு அருகில் இருந்த பேருந்து ஒன்றிற்கும் முச்சக்கரவண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடை வியாபார நிலையமொன்றில் திடீர் தீ விபத்துடன் வெடிப்பு சம்பவம் ஆடை வியாபார நிலையமொன்றில் திடீர் தீ விபத்துடன் வெடிப்பு சம்பவம் Reviewed by Vanni Express News on 5/07/2018 02:39:00 PM Rating: 5