இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ சம்பவம் விமான நிலைய தீயணைப்பு பிரிவினரால் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். 

மின்உபகரணப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலையிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த தீப்பரவல் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதுடன், விமான பயணத்திலும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் Reviewed by Vanni Express News on 5/09/2018 03:04:00 PM Rating: 5