மக்களே அவதானம் - சீனாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றிவரப்பட்ட மீன் டின்கள் பலவற்றில் புழுக்கள்

சீனாவிலிருந்து 64 கொள்கலன்களில் இலங்கைக்கு ஏற்றிவரப்பட்ட மீன் டின்கள் பலவற்றில் புழுக்கள் உள்ளதை பொதுசுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே ஊடகத் தரப்புக்கு தெரிவித்துள்ள தகவலில் ,

சீனாவிலிருந்து எட்டுமாதங்களுக்கு முன்பே கப்பலில் 61 கொள்கலன்களில் ஏற்றப்பட்ட மீன் ரின்கள் தான்கடந்த 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த கொள்கலன்களில் சிலவற்றில் இருந்த ரின்மீன்களை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்ட சந்தர்ப்பத்திலேயே அவற்றில் புழுக்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் இதைத் தொடர்ந்து துறைமுக அதிகாரிகள்அந்த கொள்கலன்களை இறக்குமதியாளர்களுக்கு விடுவிக்க தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

சோதனைகளுக்கு  மேற்கொள்ளப்படும் முன்னரே அவற்றில் 6 கொள்கலன்களை சுகாதார அமைச்சு அதிகாரிகளின் பணிபுரையின் கீழ் இறக்குமதியாளரிடம் விடுவித்துள்ளதாக கூறியுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில் ;

இந்த ஆறு கொள்கலன்களிலும் எடுத்துச் செல்லப்பட்ட மீன் டின்களை விற்பனைக்கு வழங்கவேண்டாமென இறக்குமதியாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன்.

அவற்றை விற்பனை செய்ய வேண்டாமென வர்த்தகர்களும் பயன்படுத்த வேண்டாமென பொதுமக்களுக்கும் ஊடகத்தரப்பினர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி சரத் அமுனுகம ஊடக தரப்பிற்கு  தெரிவித்துள்ள தகவலில்,

இது பற்றி சுகாதார அதிகாரிகள் மற்றும்துறைமுக அதிகாரிகளுடன் கடந்த 29ஆம் திகதி பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் அத்துடன் இந்த ரின் மீன்களை இறக்குமதி செய்த நிறுவனம் அவற்றை மீளப்பெறுவதற்கு சம்மதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேற்படி மீன் டின்களை இறக்குமதி செய்த நிறுவனம் பற்றியோ அல்லது இறக்குமதியாளர் பற்றியோ விபரங்கள் வெளியான தகவல்கள்களில் வெளியிப்படவில்லை.

அதேநேரம் சுகாதார அமைச்சின் தகவலகளை மேற்கோள்காட்டி கடந்த வாரம் இது தொடர்பில் தகவல் வெளியாகியிருந்தது.
மக்களே அவதானம் - சீனாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றிவரப்பட்ட மீன் டின்கள் பலவற்றில் புழுக்கள் மக்களே அவதானம் - சீனாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றிவரப்பட்ட மீன் டின்கள் பலவற்றில் புழுக்கள் Reviewed by Vanni Express News on 5/31/2018 05:52:00 PM Rating: 5