ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

வௌிநாடுகளுக்கு பயணிக்க இருப்பவர்கள் பயண நேரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என்று ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்று (17) மதியம் 12.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரும் வரையில் இவ்வாறு மூன்று மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கூறப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இந்த விடயத்தை கூறியுள்ளது. 

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் நேரத்திற்கு பணியாற்றும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள விஷேட அறிவித்தல் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள விஷேட அறிவித்தல் Reviewed by Vanni Express News on 5/17/2018 03:32:00 PM Rating: 5