விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர் பயணம் செய்த இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. 

இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விமான விபத்தில் 110 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் மற்றும் தலைக்காயங்களுடன் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டு ஹவானாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரில் கிரேட்டர் லாண்ட்லோவ் (வயது 23) என்பவர் இன்று உயிரிழந்தார். இதன்மூலம், பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு Reviewed by Vanni Express News on 5/22/2018 10:56:00 PM Rating: 5