ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் நான் கட்டுப்பணம் செலுத்துவேன் - பொன்சேகா

அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலுக்காக அவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தை அவர் சார்பில் தான் செலுத்த தயார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இன்று (25) கம்பஹாவில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பலர் பயந்தார்கள். வௌ்ளை வேன் அனுப்பினார், கடத்தினார், குண்ணடர்களை அனுப்பி தாக்குதல் மேற்கொண்டார், சொத்துகளை கொள்ளையடித்தார், இதனால் மக்கள் அஞ்சினார்கள். 

மேலும், நான் எப்போதும் ராஜபக்‌ஷ குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் பயந்தது இல்லை எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் நான் கட்டுப்பணம் செலுத்துவேன் - பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் நான் கட்டுப்பணம் செலுத்துவேன் - பொன்சேகா Reviewed by Vanni Express News on 5/25/2018 11:39:00 PM Rating: 5