சட்டவிரோதமான முறையில் தங்கக் பிஸ்கட்களை கடத்தி வந்த 4 இந்தியர்கள்

சுமார் ஒருகோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கக் பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்து வந்த இந்தியப் பிரஜைகள் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

குறித்த தங்கக் பிஸ்கட்களை தமது உடைகளுக்கு இடையில் மறைத்து கடத்தி வந்த 16 தங்க பிஸ்கட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. 

1.66 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 13 இலட்சத்து 72,000 ருபா என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயலத் கூறினார். 

எவ்வாறாயினும் 600,000 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் நான்கு சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் கூறினார்.
சட்டவிரோதமான முறையில் தங்கக் பிஸ்கட்களை கடத்தி வந்த 4 இந்தியர்கள் சட்டவிரோதமான முறையில் தங்கக் பிஸ்கட்களை கடத்தி வந்த 4 இந்தியர்கள் Reviewed by Vanni Express News on 5/04/2018 04:21:00 PM Rating: 5