மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது

கடந்த கால சம்பவங்களில் பாடம் படித்து மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

யுத்த வெற்றியின் 09 ஆண்டு நிறைவையிட்டு விஷேட உரையின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார். 

சுமார் 29,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளதாகவும், பயங்கரவாதிகள் திட்டமிட்டு முன்னேறிய முறையையும், எமது நாடு இரண்டாக பிளவுபட்டதையும் அனைவரும் அறிவர் என்று அவர் கூறியுள்ளார். 

இதன் காரணமாக கடந்த கால சம்பவங்கள் மூலம் பாடம் படித்து அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது Reviewed by Vanni Express News on 5/19/2018 02:28:00 PM Rating: 5