அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு..!

-ஏ.எச்.எம்.பூமுதீன்

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல. இவர் கண்டி மாவட்ட எம்.பி.

இதன் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ். இவர் அம்பாரை மாவட்ட எம்.பி. கல்முனை தொகுதிக்கான எம்.பி.

கண்டி அபிவிருத்திக்கும் - ஹரீஸுக்கும் என்ன சம்பந்தம் என்ற ரீதியில் எடக்கு முடக்காக சிலர் விமர்சனங்களை முன்வைப்பதை பார்க்கும் போது அவ்வாறானோரின் அறிவிலித்தனத்தை இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

அமைச்சொன்றை உருவாக்குவதென்பது - அந்த அமைச்சை யாருக்கு வழங்குவது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட  அந்த நபரை மனதில் கொண்டே தவிர , அதற்கு பிரதியமைச்சராக நியமிக்கப்படுகின்றவரை மையப்படுத்தியல்ல என்பது அரசியல் விவகாரங்களில் அதீத ஈடுபாடுள்ளோருக்கு நன்கு தெரிந்த விடயம்.

லக்ஷ்மன் கிரியல்ல ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். அவரது சிரேஷ்டத்துவத்தை மையப்படுத்தியும் அவரது மாவட்டத்தை இலக்காக கொண்டும் இந்தஅமைச்சு உருவாக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட அமைச்சின் பெயரைக் கொண்டுதான் அதன் பிரதியமைச்சரும் அழைக்கப்படுவார். அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அத்ப்பற்றி அலட்டிக் கொள்ளப்படமாட்டாது. அதற்காக அதே கண்டியைச் சேர்ந்த மற்றொரு எம்பிக்கும் அதன் பிரதியமைச்சு வழங்கப்படப் போவதுமில்லை. காரணம்- இது அரசியல் . தான்,தான் மட்டும்தான் என்ற நிலைப்பாட்டை பூரணமாக கொண்ட சுயநலமிக்க துறை தான் அரசியல் .இதுதான் யதார்த்தமும் கூட.

பிரதியமைச்சர் ஹரீஸ் கல்முனை என்பதற்காக "அரச தொழில் முயற்சி மற்றும் கல்முனை அபிவிருத்தி பிரதியமைச்சர் என்று உருவாக்கவும் முடியாது ;ஒரே அமைச்சை இருவேறு பெயர்களில் அழைக்கவும் முடியாது . இந்த அறிவு கூட அற்றோர்தான் இப்போது சிறு பிள்ளைத்தனமான விமர்சனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதியமைச்சர் ஹரீஸ் எனது நீண்டகால நண்பர் ; நல்லதொரு சகோதரர். ஆனாலும் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு எதிரானவன். அதற்காக வீணான ,அர்த்தமற்ற விமர்சனங்களை அவதானிக்க முடியாமலுள்ளமையால் எழுந்த ஆக்ரோஷத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

கல்முனை தொகுதி என்பது எப்போதுமே கெபினட் அமைச்சை தக்கவைத்துக் கொண்டிருந்த தொகுதி. அஷ்ரபின் மரணத்தின் பிற்பாடு அந்த சம்பிரதாயத்தை திட்டமிட்டு கபளீகரம் செய்த பெருமை மு.கா.தலைவர் ஹக்கீமையே சாரும்.

கல்முனை தொகுதியை முகா இந்த நிமிடம் வரை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கான முழுக் காரணம் ஹரீஸ்தான். அப்படிப்பட்ட ஹரீஸுக்கு- கல்முனை மக்ககளை ஹக்கீம் புறந்தள்ளுவது கணடனத்துக்குரீயது.

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சு என்பது - விளையாட்டுத் துறை பிரதியமைச்சராக இருப்பதை விட எவ்வளவோ படி உயர்வானது. சுமார் 75 நிறுவனங்கள் இந்த அமைச்சின் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முக்கியமான, பெறுமதிமிக்க அரச தொழில் வாய்ப்புகள் எல்லாமே இந்த அமைச்சின் கீழேயே வருகின்றன. இவ்வாறானதொரு அமைச்சுக்கு பிரதியமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டமையை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பாராட்டியே தீர வேண்டும். அவரது கட்சியிலும் அவரது அரசியல் பயணத்திலும் அவர் எதிர் கொண்ட அத்தன் குழி பறிப்புக்களையும் மிகப் பொறுமையாக எதீர் கொண்டதற்கு இறைவன் வழங்கிய மற்றொரு கௌரவம்தான் இந்த அமைச்சுக்கு அவர் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டமை என்றால் அது மிகையாகாது.
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு..! அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு..! Reviewed by Vanni Express News on 5/03/2018 03:45:00 PM Rating: 5