டிரம்பின் மனைவி மெலானியா வைத்தியசாலையில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிரம்பின் மனைவி மெலானியா வைத்தியசாலையில் டிரம்பின் மனைவி மெலானியா வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 5/15/2018 05:17:00 PM Rating: 5