30 பிக்குகள் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில்

உணவு விஷமானதன் காரணமாக 30 பிக்குகள் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் கெகிராவை பெரியகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பிக்குகள் கல்வி கற்கும் இடத்தில் உணவு உட்கொண்ட சிலரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உணவு விஷமானது தொடர்பில் கெகிராவை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
30 பிக்குகள் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் 30 பிக்குகள் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 5/15/2018 11:26:00 PM Rating: 5