பொலிஸ் திணைக்கள இப்தார் நிகழ்வு

-ஐ. ஏ. காதிர் கான் 

பொலிஸ் திணைக்களத்தின் பௌத்த மற்றும் மதங்கள் சங்கங்கள் இணைந்து, இம்முறை எட்டாவது வருடமாக "இப்தார்" நோன்பு திறக்கும் நிகழ்வை, நேற்று (22) கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 

 பொலிஸ் மா அதிபா் பூஜித்த ஜயசுந்தர, மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் விசேட அதிரப்படை பொறுப்பாளருமான எம். லத்தீப் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன, இந் நிகழ்வில் அமைச்சா்களான ரவூப் ஹக்கீம், பைஸா் முஸ்தபா, றிஷாத் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சா்களான பைசால் காசீம், அலி சாஹிா் மெளலானா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான துாதுவா்கள், முஸ்லிம் புத்திஜீவிகள், ஊடகவியலாளா்கள் மற்றும் நாட்டிலுள்ள முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனா்.

இந் நிகழ்வின்போது, மாத்தறை மெளலவி அர்க்கான் ஆமின் ஆங்கில மொழி மூலமும், மௌலவி ஸஹ்ரான் ஹஸன் சிங்கள மொழி மூலமும் மாா்க்க உபன்னியாசங்களை நிகழ்த்தினா், அத்துடன், இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூாியின் மாணவா்களது கஸீதா நிகழ்வும் இடம்பெற்றன.
பொலிஸ் திணைக்கள இப்தார் நிகழ்வு பொலிஸ் திணைக்கள இப்தார் நிகழ்வு Reviewed by Vanni Express News on 5/23/2018 11:44:00 PM Rating: 5