முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு  இடம்பெறவுள்ளது.

கொழும்பு - 07, இல: 117, விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இவ்விப்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பொது எதிரணி  பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் அதிகாரிகள்,  உலமாக்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு Reviewed by Vanni Express News on 5/29/2018 05:21:00 PM Rating: 5