பா.உ.இஷாக் ரஹுமானின் சொந்த நிதியில் புதிய மக்கள் மண்டபம் - Photos

கெபித்திகொல்லாவ பிரதேச சபைக்கு உட்பட்ட ஏக்கர் 5 கிராமத்தில் பொதுமக்கள் பாவனைக்காக மக்கள் மண்டபம் ஒன்றை கெபித்திகொல்லாவ பிரதேச சபை உறுப்பினர் இப்ராஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து அம்னைத்துக்கொடுத்தார்.

இக்கட்டிடத்தின் திறப்புவிழா 2018.05.13 அன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

இந்நிகழ்வின்போது அப்பிரதேசத்தை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகம் ஒன்றிற்கு விளையாட்டு உபகரணங்கள் சிலவும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமானின் சொந்த நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டது. 

பா.உ.இஷாக் ரஹுமானின் சொந்த நிதியில் புதிய மக்கள் மண்டபம் - Photos பா.உ.இஷாக் ரஹுமானின் சொந்த நிதியில் புதிய மக்கள் மண்டபம் - Photos Reviewed by Vanni Express News on 5/14/2018 03:34:00 PM Rating: 5