அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்திக்கு இஷாக் ரஹுமான் உதவுவதாக உறுதி - Photos

-Mohamed Mithun Khan


கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்கு உட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம் அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் இன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பங்கேற்புடன் குறித்த அனாதைகள் இல்லத்தில் நடைபெற்றது. 

55 இற்கும் அதிகமான பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் வளரும்  இவ் அனாதைகள் இல்லம்  பொருளாதார சிக்கல்களை எதிர் நோக்கிய வன்னம் காணப்படுகின்றது. இதன் விருத்தி சம்மந்தமாக வெளிநாட்டு தனவந்தர்களுடைய உதவிகளை நாடி எவ்வாறாயினும் இந்த அனாதைகள் இல்லத்தை பொருளாதார நெருக்கடி இல்லாமல் நடாத்தி செல்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக இக்கலந்துரையாடலில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.
அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்திக்கு இஷாக் ரஹுமான் உதவுவதாக உறுதி - Photos அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்திக்கு இஷாக் ரஹுமான் உதவுவதாக உறுதி - Photos Reviewed by Vanni Express News on 5/27/2018 11:09:00 PM Rating: 5