ஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது

மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் கிழ் இயங்கும் ஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா நேற்று மிக விமர்சையாக நடைபெற்றது.

ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ராஷித் மல்ஹர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஸா மல்ஹர்தீன் உட்பட ஆலொசனை குழு அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் பேசும் மக்களின் ஊடக கனவை நிறைவேற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஜே.மீடியா கல்லூரி குறுகிய காலத்திற்குள் தேசிய ஊடகங்களில் பணியாற்றக்கூடிய தகைமையுடைய ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சியும் அனுபவமும் கொண்ட ஊடகர்களின் வழிகாட்டலும் அதிக பயிற்சியுடன் கூடிய செயன்முறை விளக்கங்களும் இவற்றிற்கான காரணங்கள் எனலாம்.

ஜே.மீடியா கல்லூரியின் 6ஆவது குழுவில் இணைந்து நீங்களும் தகுதியான ஊடகவியலாளராக மாற நிணைத்தால் அழையுங்கள் 0777362492 | 0777162511
ஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது ஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது Reviewed by Vanni Express News on 5/14/2018 04:05:00 PM Rating: 5