அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த போட்டியிட முடியாது - பிரதமராக இருப்பார்

பாராளுமன்றத்தின் புதிய கூட்ட தொடர் நாளை ஆரம்பமாக உள்ளதுடன் அரசாங்கத்தில் இருந்து விலகிய தாம் உட்பட 16 பேர் கொண்ட அணி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயற்படுவது என்று தமது அணியினர் நிலையான முடிவில் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியாத போதிலும் அவர் பிரதமராக பதவி வகிப்பதில் எந்த தடையும் கிடையாது. நான் உட்பட எமது அணியினர் அவரது தலைமையின் கீழ் செயற்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போனால், நடு நிலையான ஒரு இடம் இருக்க வேண்டும்.

அந்த நடுநிலையான இடத்துடன் இணைந்து ராஜபக்ச ஆட்சியை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராக உள்ளது எனவும் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த போட்டியிட முடியாது - பிரதமராக இருப்பார் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த போட்டியிட முடியாது - பிரதமராக இருப்பார் Reviewed by Vanni Express News on 5/07/2018 03:01:00 PM Rating: 5