சில நிமிடங்களில் நல்ல வரவேற்பு காலா படத்தின் செம வெயிட் பாடல் - வீடியோ

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜூன் 7ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் மே 9ம் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் ‘செம வெயிட்’ என்ற சிங்கிள் பாடலை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 7 மணிக்கு செம வெயிட் பாடல் யூடியூப்பில் பாடல் வெளியிடப்பட்டது.

பாடல் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வீடியோவை காண்க

வீடியோ
சில நிமிடங்களில் நல்ல வரவேற்பு காலா படத்தின் செம வெயிட் பாடல் - வீடியோ சில நிமிடங்களில் நல்ல வரவேற்பு காலா படத்தின் செம வெயிட் பாடல் - வீடியோ Reviewed by Vanni Express News on 5/02/2018 11:17:00 PM Rating: 5