திடீர் சுகவீனமுற்ற அமைச்சர் கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை

திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட ஐதேக தவிசாளரான அமைச்சர் கபீர் காசிமுக்கு தொண்டையில் அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட சுகவீனத்தை அடுத்து கபீர் காசிம், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையின் அவசிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலை தேறி வருவதாக ஐதேக வட்டாரங்கள் நேற்று தகவல் வெளியிட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக்காலை மருத்துவமனைக்குச் சென்று கபீர் காசிமைச் சந்தித்திருந்தார்.
திடீர் சுகவீனமுற்ற அமைச்சர் கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை திடீர் சுகவீனமுற்ற அமைச்சர் கபீர் காசிமுக்கு அறுவைச் சிகிச்சை Reviewed by Vanni Express News on 5/07/2018 03:49:00 PM Rating: 5