கண்டி சம்பவம் - நஷ்ட ஈடுகள் தொடர்­பான பிரதமருடன் கலந்துரையாடல்

கண்டி மாவட்­டத்தில் அண்­மையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள சொத்­து­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய நஷ்ட ஈடுகள் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று இன்று புதன்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. 

அலரி மாளி­கையில் நடை­பெ­ற­வுள்ள இக்­க­லந்­து­ரை­யா­டலில் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரு­மான எம்.எச்.ஏ.ஹலீம் இந்து சமய, புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் அதி­கா­ரிகள் என்போர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

கண்டி வன்­செ­யல்கள் இடம்­பெற்று சுமார் 2 மாதங்கள் கடந்தும் சேதங்­க­ளுக்­குள்­ளான சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வதில் கால­தா­மதம் நில­வு­வதை அமைச்சர் ஹலீம், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டி­ய­தை­ய­டுத்தே இக்­க­லந்­து­ரை­யாடல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் கண்டி மாவட்­டத்தில் இடம்­பெற்ற வன்­செயல் கார­ண­மாக 636 சொத்­துகள் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்றில் சுமார் 125 சொத்­து­க­ளுக்கு ஏற்­க­னவே நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் 271 சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்கும் காசோலைகள் தற்போது தயாராகவுள்ளதாகவும் புனர்வாழ்வு அமைச்சின் மேலதிக பணிப்பாளர் தெரிவித்தார்.
கண்டி சம்பவம் - நஷ்ட ஈடுகள் தொடர்­பான பிரதமருடன் கலந்துரையாடல் கண்டி சம்பவம் -  நஷ்ட ஈடுகள் தொடர்­பான பிரதமருடன் கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 5/02/2018 04:19:00 PM Rating: 5