வவுனியா புளியங்குளத்தில் "பாரதிக்கோட்டம்" வீட்டுத்திட்டம் இன்று திறந்து வைப்பு

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடற்றோருக்கு "செமட்ட செவண" வீடமைக்கும் திட்டத்தின் கீழ் அறுபத்தெட்டாவது மாதிரிக்கிராமம் இன்று வவுனியா புளியங்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை அரசின் 'உதாகம' யாவருக்கும் வீட்டுரிமை  எனும் உயரிய கொள்கையின் அடிப்படையில் கெளரவ வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான்  மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்களான, சிவசக்தி ஆனந்தன் மற்றும் டாக்டர்  சிவமோகன் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் . உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் பிரமுகர்களும்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாரதிக்கோட்டம் என நாமமிட்டு திறக்கப்பட்ட இவ் இருபத்திமூன்று வீடுகளும் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா புளியங்குளத்தில் "பாரதிக்கோட்டம்" வீட்டுத்திட்டம் இன்று திறந்து வைப்பு வவுனியா புளியங்குளத்தில் "பாரதிக்கோட்டம்" வீட்டுத்திட்டம் இன்று  திறந்து வைப்பு Reviewed by Vanni Express News on 5/19/2018 11:08:00 PM Rating: 5