லெபனானில் இருந்து 58 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

லெபனானுக்கு தொழிலுக்காக சென்ற இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற லெபனான் சென்றிருந்த 58 இலங்கைப் பெண்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். 

குவைட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கே.யூ. 363 என்ற விமானம் மூலம் இன்று காலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அவர்களை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
லெபனானில் இருந்து 58 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர் லெபனானில் இருந்து 58 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர் Reviewed by Vanni Express News on 5/04/2018 10:43:00 PM Rating: 5