காதலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக துப்பாக்கி ஏந்திய காதலன்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கினறனர். 

தும்மலதெனிய மற்றும் சிரிகம்பல பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (13) இரவு குறித்த சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வென்னப்புவ, பண்டிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். 

அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரையும் குறித்த வீட்டில் உள்ளவர்கள் பிடித்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பின்னர் குறித்த வீட்டார் சந்தேகநபர்கள் இருவரையும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் மற்றும் அவர்களுடைய மோட்டார் சைக்கிளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பண்டிருப்பு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரை காதலிப்பதாகவும், காதலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக துப்பாக்கி ஏந்திய காதலன் காதலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக துப்பாக்கி ஏந்திய காதலன் Reviewed by Vanni Express News on 5/14/2018 10:08:00 PM Rating: 5