பிரதியமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டல்

-எம்.ரீ. ஹைதர் அலி

நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுயேட்சைக் குழு வேட்பாளராக போட்டியிட்ட எரோ பிறைவேற் லிமிட்டெற் விளம்பர நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஐ.எம். றனீஸ் அவர்கள் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காவத்தமுனை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவிற்கு பிரதியமைச்சர் மர்ஹூம். முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சபையில் பிரேரணை ஒன்றினை முன்வைக்குமாறு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. MB. சித்தி ஜெஸீமா அவர்களிடம் வினையமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

எரோ பிறைவேற் லிமிட்டெற் விளம்பர நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஐ.எம். றனீஸ் அவர்கள் இது தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. MB. சித்தி ஜெஸீமா அவர்களுக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமானது

கௌரவ. MB. சித்தி ஜெஸீமா,
பிரதேச சபை உறுப்பினர்,
கோறளைப் பற்று மேற்கு.   

பிரதியமைச்சர் மர்ஹூம். முகைதீன் அப்துல் காதர்  அவர்களின் பெயர் சூட்டல் 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காவத்தமுனையில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவிற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்திய பிரதியமைச்சர் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். 

மேலும் மர்ஹும். முகைதீன் அப்துல் காதர் அவர்கள் எமது தொகுதி முஸ்லிம்களின் வளர்சிக்காக அயராது உழைத்து பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டதுடன் எதிர்கால சமுதாயத்திற்காக பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் முன்மொழிந்தவர். 

அன்று அவரினால் உருவாக்கப்பட்ட திட்டங்களினால் இன்று எமது பிரதேச மக்கள் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொன்டுள்ள நிதர்ஸனமான உண்மையாகும். 

ஆனால் கல்குடா மக்கள் அவரின் நாமத்தை மறந்துசெல்வதும்  தேர்தல் காலங்கலில் மாத்திரம் வாக்கு கேட்பதற்கு அன்னாரை ஞாபகமூட்டுவதும் பின்னர் மறந்துவிடுவதும் எமது பிரதேச அரசியல்வாதிகளின் பன்பாடாக இருந்துவருகினற்து.   

எனவே அன்னாரின் ஞாபகத்தை நினைவூட்டும் வகையில் காவத்தமுனையில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவிற்கு மர்ஹும். முஹைதீன் அப்துல் காதர் சிறுவர் பூங்கா என பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சபையில் பிரேரணை ஒன்றினை முன்வைக்குமாறு வினையமாக கேட்டுக்கொள்கின்றேன்.  

MIM. றனீஸ் 
முன்னால் பிரதேச சபை வேட்பாளர் 
கோறளைப் பற்று மேற்கு.  

இதன் பிரதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான சுயேட்சைக் குழு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ. MTM. அன்வர், கௌரவ. MM. ஹனீபா, கௌரவ. SA. அன்வர் - ஆசிரியர், கௌரவ IL. பதுறுதீன், கௌரவ. AG. அஸீஸஷுர் ரஹ்மான் - ஆசிரியர், கௌரவ. MI. ஹாமீத் (சிறாஜி), கௌரவ மாஜிதா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

றனீஸ் அவர்கள் ஐந்து வருடங்கள் காவத்தமுனை அல்-முபாறக் இளைஞர் கழகத்தின் தலைவராக பதவி வகித்ததுடன், பிரதேச இளைஞர் சம்மேளனத்தில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளையும் வகித்துள்ளார் அது மாத்திரமல்லாமல் மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.

காவத்தமுனை அல்-முபாறக் இளைஞர் கழகத்தின் தலைவராக இருந்த காலகட்டத்தில் தனது முயற்சியினால் இளைஞர் கழகத்தினூடாக ஒரு இலட்சம் ரூபா நிதியினை காவத்தமுனையில் அமையப்பெற்றுள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு பெற்றுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தகக்தாகும்.

காவத்தமுனை இளைஞர்களுக்கிடையில் விளையாட்டுத் துறையினை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களை வழிநடாத்தும் விடயத்திலும் இன்றுவரை மிகவும் கரிசனை கொண்டவராக  செயற்பட்டு வருகின்றார்.
பிரதியமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டல் பிரதியமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயர் சூட்டல் Reviewed by Vanni Express News on 5/07/2018 10:47:00 PM Rating: 5