மன்னார் பி.ச உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வை பகிஷ்கரித்த த.தே.கூ

மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (03) காலை 10 மணிக்கு மன்னார் பிரதேச சபையில் நடைபெற்றது. 

மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை, தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேர் உட்பட 11 உறுப்பினர்கள் பகிஷ்கரித்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

மேலும், மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக்கட்சி, ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் , உறுப்பினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உட்பட 11 உறுப்பினர்கள் குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக அமைச்சர் றிஸாட் பதியுதீன், வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மன்னார் பிரதேச சபை செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர் செல்லத்தம்பு, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அன்சில், முன்னாள் உப வேந்தர் கலாநிதி இஸ்மாயில், குருநகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் என பலரும் கலந்து கொண்டனர். 
மன்னார் பி.ச உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வை பகிஷ்கரித்த த.தே.கூ மன்னார் பி.ச உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வை பகிஷ்கரித்த த.தே.கூ Reviewed by Vanni Express News on 5/03/2018 05:58:00 PM Rating: 5