ஹசன் ரூஹானியை சந்தித்த ஜனாதிபதி

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் இரண்டு நாள் அரச முறைப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்தித்துள்ளார். 

இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இச்சந்திப்பின்போது கைச்சாத்திடப்படவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஈரானுக்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவாகும்.
ஹசன் ரூஹானியை சந்தித்த ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்தித்த ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 5/13/2018 05:07:00 PM Rating: 5