இன்று நள்ளிரவு முதல் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும்

அனைத்து விதமான பால் மாவின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி நாளை (05) முதல் தயாரிக்கப்படும் 01 கிலோ கிராம் நிறையுடைய பால் மாவின் விலை 50 ரூபாவாலும் 400 கிராம் நிறையுடைய பால் மா விலை 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சிறுவர்களுக்கான பால் மா விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட உள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் இன்று நள்ளிரவு முதல் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் Reviewed by Vanni Express News on 5/04/2018 03:25:00 PM Rating: 5