இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையில் மாற்றம்

புதிய விலைச் சூத்திரத்திற்கமைவாக எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றமடையலாம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த விலை மாற்றமானது உலக சந்தை விலைக்கமைய அதிகரிக்கும் அல்லது குறையும் என்று அவர் கூறியுள்ளார்.

புதிய விலைச் சூத்திரத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த புதிய விலைச் சூத்திரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையில் மாற்றம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையில் மாற்றம் Reviewed by Vanni Express News on 5/10/2018 10:46:00 PM Rating: 5