அரசாங்கம் அதிகமான தடவைகள் அமைச்சரவை மாற்றங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளது

இந்த நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்று நன்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தி வருகிறது.

மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள்.அதன் வெளிப்பாடே கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களால் வெளிப்படுத்தப்பட்டது. தேர்தல் பெருபேறுகளை கருத்தில் கொண்டாவது அரசாங்கம் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்வார்கள் என அனைவரும் எதிர்ப்பார்த்தார்கள் ஆனால் அதையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.

அமைச்சரவை மாற்றங்களை செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை கடத்தும் இந்த அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யவில்லை.இந்த அமைச்சரவை மாற்றத்தினாலும் மக்களுக்கு நாட்டிற்க்கோ நல்லது நடக்கும் என நம்பமுடியாது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளது.கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த விடயம் பதியப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என குறிப்பிட்டார்.
அரசாங்கம் அதிகமான தடவைகள் அமைச்சரவை மாற்றங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளது அரசாங்கம் அதிகமான தடவைகள் அமைச்சரவை மாற்றங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளது Reviewed by Vanni Express News on 5/01/2018 05:57:00 PM Rating: 5