நாமல் ராஜபக்‌ஷ எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்

பாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் சிலர் பொலிஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெலியத்த பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளதாகவும் இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்து எமது எதிர்கால சந்ததியினரை போதை பாவனைகளில் இருந்து  பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இது விடயமாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போதைபொருட்கள் பாடசாலை மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக பரிமாறப்பட்டு வருகிறதாக அறிகிறோம்.

பாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவர்கள் சிலர் பொலிஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெலியத்த பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளதாக இன்று எமக்கு அறியக்கிடைத்தது.இது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல முழு நாடும் முகம்கொடுத்துள்ள பிரச்சினை .

ராஜபக்‌ஷ அரசாங்கம் குடு அரசாங்கம்,கஞ்சா அரசாங்கம்  எனக்கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று பாதாள உலக கோஷ்டியினருக்கு பால் ஊற்றி வளர்பதன் விளைவு இன்று பாடசாலைக்குள்  மாணவர்கள கஞ்சா விற்பனை செய்யும் அளவிற்கு நிலமை சென்றுள்ளது.

நாட்டில் போதை பொருட்களை வினியோகிக்கும் பிரபலங்கள் யார் என்பதை பொலிஸாரும் இந்த நாட்டு மக்களும் நன்கறிவார்கள்.போதை பொருள்களுடன் தொடர்புடைய  குற்றச்சாட்டில் சிக்கிய பாதாள உலகத்தை சேர்ந்தவர்களின் திருமண வீடுகளுக்கு இந்த அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியமையின் விளைவே இன்று போதைபொருட்கள் பாடசாலை மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக பரிமாறப்பட்டு வருகிறது.

எம்மை சிறையில் அடைக்க எடுக்கும் கவனத்தை  இந்த விடயங்களில் எடுத்து எமது பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவணைகளில் இருந்து மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்‌ஷ எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள் நாமல் ராஜபக்‌ஷ எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள் Reviewed by Vanni Express News on 5/24/2018 02:20:00 PM Rating: 5