இரண்டு மடங்கு குண்டான நமீதா - அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் நமீதா. இவர் உடல் அமைப்பு ஓரளவு குண்டு தான். என்றாலும், ரசிகர்கள் அதையும் தனி அழகாக கொண்டாடினார்கள்.

‘மச்சான்ஸ்’ என்று இவர் ரசிகர்களை அழைத்தது, இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக தமிழக ரசிகர்களை தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொண்டார். உடல் குண்டானதால் பட வாய்ப்புகள் குறைந்தன. ஒன்றிரெண்டு படங்களில் மட்டுமே தலை காட்டும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். அப்போது கொஞ்சம் குண்டாக காணப்பட்டார். ஆனால், நமீதா இப்போது தனது உடல் எடையை பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. திருமணத்துக்குப்பிறகு அவர் இரண்டு மடங்கு குண்டாகி விட்டார்.

சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘இவ்வளவு குண்டாகி விட்டாரே’ என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். எடையை கொஞ்சம் குறையுங்கள் என்று சிலர் ஆலோசனையும் வழங்கி உள்ளனர்.
இரண்டு மடங்கு குண்டான நமீதா - அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இரண்டு மடங்கு குண்டான நமீதா - அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் Reviewed by Vanni Express News on 5/02/2018 03:32:00 PM Rating: 5