கொடும்பாவி எறித்தல் இஸ்லாத்தில் ஆகுமா ? ஹராமா ? ஹலாலா ?

-என்.எம். அப்துல்லாஹ்


கொடும்பாவி எறித்தல் இஸ்லாத்தில் ஆகுமா? ஹராமா? ஹலாலா?  யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கௌரவ அமைச்சருமாகிய ரிசாட் பதியுதீன் ஆகியோரிடம் விளக்கம் கோறினார் யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் என். எம். அப்துல்லாஹ்  

கடந்த 2018.05.04 ஆம் திகதி யாழ்ப்பாணம் முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் இல் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து வடக்குமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களுக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டு, அவரது உருவபொம்மை (கொடும்பாவி) எறியூட்டப்பட்டமை குறித்து யாழ் கிளிநொச்சி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையிடம்  யாழ் முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் என். எம். அப்துல்லாஹ் விளக்கம் கோரி நேற்றைய தினம் (2018.05.07) கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார். 

மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. குறித்த தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வை ஜம்இய்யத்துல் உலமாசபை நேரடியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அந்த வகையில் உங்களிடம் முன்வைக்கப்படும் பின்வரும் கேள்விகளுக்கு குர்ஆன் - சுன்னா வழி நின்று பதிலை (பத்வாவினை) எழுத்து மூலம் எதிர்பார்க்கின்றேன். என்று இருந்தது. அவ் வினாக்களாவன 

• முஸ்லிம் ஒருவருக்கோ? அல்லது முஸ்லிம் அல்லாத ஒருவருக்கோ? அவரது உருவ பொம்மையினை எறியூட்டுவதற்கு முஸ்லீம்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? இதற்கு உலமாசபையின் பதில் என்ன?

• 2018.05.04 ஆம் திகதி இந் நிகழ்வு அரங்கேரிய பொழுது உலமாசபை (தலைவர் மற்றும் உறுப்பினர்கள்) குறித்த பள்ளிவாசலினுல் பைத்துல்மால் நிதியம் ஆரம்ப நிகழ்வுக்காக  கூடி இருந்தது. அவ்வாறு இருந்தும் இதனை தடுக்காததன் காரணம் என்ன? (தாங்கள் தடுக்காததனால் இதற்கு ஜம்மியத்துல் உலமா ஆதரவு என்று பொருள் கொள்ளலாமா?)

• இஸ்லாமிய கடமையான ஜும்ஆவை முடித்து விட்டு, தக்வா குறித்தும் - அல்லாஹ்வை பற்றியும் பயானில் கேட்டு விட்டு, 2 ரகாயத் தொழுதும் விட்டு, இக் கீழ்த்தரமான செயலை செய்த நபர்கள் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன? யாழ் கிளிநொச்சி ஜம்மியத்துல் உலமா சபையின் பார்வை என்ன? 

• இச் செயற்பாடு மார்க்கத்திற்கு முரணான செயற்பாடாக இருப்பின் தங்கள் நிர்வாகத்தின் கட்டமைப்பிற்குள் உள்ள பள்ளிவாசல்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் போது இடம் கொடுக்கும் போது குறித்த நிர்வாக சபை மீது தங்களால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் என்ன? 

• இச்செயற்பாடு மார்க்கம் அங்கீகரிக்காத ஒன்றாக இருந்தால் இச் செயற்பாட்டைக் கண்டித்து ஜம்மியத்துல் உலமா சபையினால் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு துண்டுப் பிரசுரம் மற்றும் பொது அறிவித்தல் மூலம் இதனைத் தெளிவுபடுத்தி விளக்கம் ஒன்றை வெளியீடு செய்வது தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன? என்ற வினாக்களோடு மேற்படி வினாக்களுக்கான பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன். என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இக் கடிதத்தின் பிரதிகள் தலைவர் - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை – (தொடர் நடவடிக்கைக்காக) மற்றும் கௌரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன்- தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 
கொடும்பாவி எறித்தல் இஸ்லாத்தில் ஆகுமா ? ஹராமா ? ஹலாலா ? கொடும்பாவி எறித்தல் இஸ்லாத்தில் ஆகுமா ? ஹராமா ? ஹலாலா ? Reviewed by Vanni Express News on 5/08/2018 05:46:00 PM Rating: 5