சிலாவத்துறையில் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு வைபவம் - Photos

-செய்தியாளர் முஹம்மட் சப்ராஸ் 

ஐக்கிய அரபு இராட்சியத்தின் உதவியின் மூலமான இந்த வீட்டுத்திட்டத்திற்கு நேற்று காலை (05/05/2018) அடிக்கல் நாட்டும் நிகழ்வு முசலி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் றயிசுதீன் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்றதுடன் கௌரவ அதிதியாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்யத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தஹ் அல் முல்லாஹ்வும் வருகை தந்திருந்தார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 43 வீடுகளும் 4 கடைகளும் 2 வகுப்பறைக் கட்டடங்களும் தொழுகைக்கான பள்ளிவாசல் சகிதம் மொத்தமாக 70 வீடுகள் கட்டப்பட இருக்கின்றன

இந்த வீட்டுத்திட்டத்தினை ஐக்கிய அரபு இராட்சிய மக்கள் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கி வைத்துள்ளதுடன் இந்த கட்டுமான திட்டத்தினை கான் கட்டுமான நிறுவனம் பொறுப்பெடுத்து நடைமுறைப்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது,

இன்னிகழ்வில் முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், பிரதி தவிசாளர் றயிசுதீன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அன்சில், பிரதேச சபை வேட்பாளர் லாபிர் மௌலவி,ஆசிரியர் ரசீன், அமைச்சரின் இணைப்பாளர் சஹீன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிலாவத்துறையில் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு வைபவம் - Photos சிலாவத்துறையில் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு வைபவம் - Photos Reviewed by Vanni Express News on 5/06/2018 10:05:00 PM Rating: 5