உயிருக்குப் போராடும் ஓர் தந்தையை காப்பாற்ற உதவுவோம்

புத்தளம் 42, Kadumaiyan Kulam Road,Puttalam ஐச் சேர்ந்த M.H.M. Haleel என்பவர் 2015 தொடக்கம் சிறுநீரகம் செயலிழந்து அவதியுற்று வருகிறார். 

மேற்குறித்த நபர் இருதய அடைப்பு, மற்றும் நீரிழிவு நோய்களினால் ஏலவே பாதிக்கப்பட்டதையடுத்து Bypass அறுவை சிகிச்சைக்கு உள்ளாகியதோடு ஒரு காலின் சிறு பகுதி துண்டிக்கப்படும் நிலைக்கு இலக்கானார்.

மேலும் இவையனைத்தையும் தாண்டி சிகிச்சைகள் பெற்று குணமடைந்திருக்கும் தருவாயில் சிறுநீரகம் செயலிழந்து மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையை கடத்தி வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகவும் கிழமைக்கு மூன்று விடுத்தம் கொழும்பில் அமைந்துள்ள மத்திய வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு மற்றும் இரத்த மாற்றத்திற்காகவும் ஏற்படும் செலவினங்களுக்கான பொருளாதார உதவியை மக்களாகிய உங்களிடம் வேண்டி நிற்கிறார்.

ஓர் செல்வந்தராக இருந்த இவர் தனக்கு ஏலவே ஏற்பட்ட நோய்களது சிகிச்சைக்காக தனது அனைத்து சொத்து செல்வங்களை செலவழித்து தற்போது வெற்றுக் கைகளுடன் ஓட்டாண்டியாக மாறியது மாத்திரமன்றி சூழவுள்ள அனைவராலும் கைவிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சிறுநீரக நோய்க்கு இலக்காகி சிகிச்சைக்கான பொருளாதார உதவியின்றி மிகவும் அல்லலுறுகிறார்.

ஒரு கிழமையில் மூன்று விடுத்தம் கொழும்புக்கு சென்று இரத்தத்தை மாற்றிவர போக்குவரத்து செலவுக்கு மட்டும் 35000 ரூபாய் தேவைப்படும் அதே வேளை ஒரு மாதத்திற்கு 140,000 ரூபாயம் பணம் தேவைப்படுகிறது.

அத்தோடு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சுமார் 25 இலட்சம் ரூபாய் பணம் தேவையாகும் இத்தந்தைக்கு குறைந்த பட்சம் வாராவாரம் தேவைப்படும் (35000 /=) செலவினங்களுக்காவாவது உதவி செய்யுமாறு பணிவாக வேண்டுகிறோம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போது “யார் ஓர் ஆத்மாவை வாழ்வளிக்கிறார முழு மனிதர்களையும் வாழ்வளித்தவர் போலாவார்” எனும் நன்மைக்குரியவர்களாக ஆக போட்டிபோடுவோம். 

இத்தோடு தேவையான உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் இனணைக்கட்டுள்ளன. 

தொலைபேசி இலக்கம்: 
M.H.M.0777101429

கணக்கிலக்கம்: 
M.H.M. Kaleel
A/C: 8148020287
Commercial Bank 
Puttalam Branch- Sril Lanka

குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் கணக்கிலக்கம் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படத் தகுதியானவை. 

“மற்றவருக்கு சந்தோசத்தை ஏற்படுத்திப் பாருங்கள் உங்கள் வாழ்வும் நிச்சயம் சந்தோசத்தால் வளமாகும்”

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
புத்தளம்
உயிருக்குப் போராடும் ஓர் தந்தையை காப்பாற்ற உதவுவோம் உயிருக்குப் போராடும் ஓர் தந்தையை காப்பாற்ற உதவுவோம் Reviewed by Vanni Express News on 5/05/2018 02:07:00 PM Rating: 5