கொழும்பு - புளூமெண்டல் பள்ளிவாசலை விஸ்தரிக்க உதவிகள் எதிர்பார்ப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

கொழும்பு 15, 520/41, புளூமெண்டல் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசலில் தொழுவதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளிவாசலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எதிரே புனித ரமழான் வருகின்ற காரணத்தால் பெண்கள் தொழுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால் பள்ளிவாசலை துரித கதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

பள்ளிவாசலை விஸ்தரிப்பதற்கு போதுமான நிதி வசதிகள் குறைவாக இருப்பதன் காரணமாக உதவ முடியுமானவர்கள் தங்களால் முடியுமான உதவியை பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கி வைக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் தனவந்தர்கள் மற்றும் பரோபகாரிகளைக் கேட்டுள்ளது.

மேலதிக விபரங்களை 0777 564 786 (செயலாளர் - ஏ.ஏ. முஸாக்கீன்) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

மஸ்ஜிதுல் றஹ்மானியா, கொமர்ஷியல் வங்கி -  (MUTWAL) முத்வல் கிளையின் இலக்கமான 1230068201 என்ற வங்கி கணக்கிலக்கத்திற்கு தனவந்தர்கள், பரோபகாரிகள் தங்களது பங்களிப்பைச் செய்யலாம்.
கொழும்பு - புளூமெண்டல் பள்ளிவாசலை விஸ்தரிக்க உதவிகள் எதிர்பார்ப்பு கொழும்பு - புளூமெண்டல் பள்ளிவாசலை விஸ்தரிக்க உதவிகள் எதிர்பார்ப்பு Reviewed by Vanni Express News on 5/08/2018 11:05:00 PM Rating: 5