அபூ சலாஹ் என்ற அதிசயப் போராளி

-Mohamed Nizous

இவன்கா என்ற
இஸ்ரேலின் விருந்தாளியே

'இவன் கா'லமாகிப் போனது
இஸ்ரேலுக்கு வெற்றியல்ல
இழுக்கு.
ஒரு ஊனமுற்றவனைக் கூட
உயிர் கொல்லுமளவிற்கு
ஈனப் பிறவகள்
இந்த இஸ்ரேலியர்கள்
என்று நிரூபித்து விட்டார்கள்

'இவன் கா'ல் இழந்தாலும்
எதிரி மீது வீசும் கல் இழக்கவில்லை.
பலஸ்தீனப் போராடத்தின்
பலம் புரிகிறதா?

'இவன் கா'வல் படையென்ற
காவாலிப் படைக்கு
இரையாக்கப் பட்டாலும்
இந்தப் போராட்டம்
இறுதி வரை ஓயாது.

'இவன் கா' ட்டு மிராண்டிகளை
எதிர்த்தது போல்
இன்னும் ஆயிரம் 
இளைஞர்கள் இணைந்து
இஸ்ரேல் ஒழியும் வரை
எதிர்த்து நிற்பார்கள்

'இவன் கா'ஸாவில்
இழந்த இரத்தம்
உலகமெங்குமுள்ள
உணர்ச்சிகளில் தெறிக்கும்
அது
இஸ்ரேலின் எலும்பை
இரண்டாய் முறிக்கும்

அபூ சலாஹ் என்ற
ஆக்ரோஷப் போராளியே
உன் கால்களைக் கொடுத்து
ஓராயிரம் கால்களை
ஓரணியில் சேர்த்தாய்
உன் உயிரைக் கொடுத்து
ஒரு போராட்டத்துக்கு
உயிரூட்டினாய்.
உன் 
மண்ணறை
மணமாய் அமையட்டும்
அபூ சலாஹ் என்ற அதிசயப் போராளி அபூ சலாஹ் என்ற அதிசயப் போராளி Reviewed by Vanni Express News on 5/15/2018 03:11:00 PM Rating: 5