உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 23 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 23 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின் படி இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

சேவையின் அவசியம் கருதி இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுல் 06 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 06 பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குகின்றனர். 

அத்துடன் 09 பொலிஸ் பரிசோதகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டவர்களுள் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 23 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 23 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் Reviewed by Vanni Express News on 5/12/2018 04:21:00 PM Rating: 5