கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை - விரைவில் நிலமை சீராகிவிடும்

கொழும்பில் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொலன்னாவயில் இருந்து கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள முதன்மை உப மின் விநியோக கட்டமைப்புக்கு மின் வழங்கும் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இருந்து மின் விநியோகிக்கும் பிரதேசங்களுக்கு மின் தடைப்பட்டுள்ளது என்று அந்த அமைச்சு கூறியுள்ளது. 

இதனால் கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் சில புறநகர்ப் பகுதிகளிலும் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் இந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை - விரைவில் நிலமை சீராகிவிடும் கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மின்சாரம் தடை -  விரைவில் நிலமை சீராகிவிடும் Reviewed by Vanni Express News on 5/25/2018 03:25:00 PM Rating: 5