அதிக காற்று - சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை

அதிக காற்று காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வீசுகின்ற கடும் காற்று காரணமாக மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது 

அதன்படி தங்காளை, பெலியத்த, மித்தெனிய, வலஸ்முல்ல, சூரியவெவ மற்றும் ஹக்மன ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதிக காற்று - சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை அதிக காற்று - சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை Reviewed by Vanni Express News on 5/30/2018 01:52:00 PM Rating: 5