ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். 

இன்று அதிகாலை 1.45 மணியளவில் கடார் விமான சேவைக்கு சொந்தமான Q.R.-668 என்ற விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார். 

ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்தநாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி உட்பட அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலருடன் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், 05 உட்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டிருந்தார்.
ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார் ஈரான் சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார் Reviewed by Vanni Express News on 5/15/2018 04:20:00 PM Rating: 5