இன்று நடக்கவிருந்த புதிய அமைச்சரவை கூட்டம் நாளை

பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் இன்று (08) நடக்கவிருந்த அமைச்சரவை கூட்டம் நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள முதல் தடவை இதுவாகுமென என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று நடக்கவிருந்த புதிய அமைச்சரவை கூட்டம் நாளை இன்று நடக்கவிருந்த புதிய அமைச்சரவை கூட்டம் நாளை Reviewed by Vanni Express News on 5/08/2018 05:00:00 PM Rating: 5