ரமழான் நோன்பு காலப்பகுதியில் தேவையான அளவு பேரீச்சம்பழத்தை விநியோகிக்குமாறு பிரதமர் ஆலோசனை

ரமழான் நோன்பு காலப்பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு தேவையான அளவு பேரீச்சம்பழத்தை விநியோகிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைவாக பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். 

ரமழான் நோன்பு காலப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஊடாக பேரீச்சம்பழம் விநியோகிக்கப்படவுள்ளது. 

கடந்த வருடத்தில் சவூதி அரேபியா இலவசமாக 150 தொன் பேரீச்சம்பழத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கமைவாக சதொச ஊடாக மேலும் 150 தொன் பேரீச்சம் பழத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இம்முறை மத்தியகிழக்கு நாடுகளில் பேரீச்சம்பழத்தின் அறுவடை குறைவடைந்தமை காரணமாக இலவசமாக கிடைக்கும் பேரீச்சம்பழம் குறைவடைந்துள்ளது. 

இதன் காரணமாக சதொச ஊடாக இந்த வருடத்தில் போதுமான அளவு பேரீச்சம்பழத்தை மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சதொச தலைவருக்கும் நிதியமைச்சின் அதிகாரிகாளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

பேரீச்சம்பழத்தை விநியோகிப்பதில் ஒன்றிணையுமாறு காகில்ஸ் நிறுவனம் உள்ளிட்ட தனியார் பிரிவினருக்கும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரமழான் நோன்பு காலப்பகுதியில் தேவையான அளவு பேரீச்சம்பழத்தை விநியோகிக்குமாறு பிரதமர் ஆலோசனை ரமழான் நோன்பு காலப்பகுதியில் தேவையான அளவு பேரீச்சம்பழத்தை விநியோகிக்குமாறு பிரதமர் ஆலோசனை Reviewed by Vanni Express News on 5/14/2018 11:17:00 PM Rating: 5