சீரற்ற காலநிலை அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (21) நடைபெற்றது. 

இதன்போது சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும், மேலும் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.
சீரற்ற காலநிலை அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல் சீரற்ற காலநிலை அலரிமாளிகையில் விசேட கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 5/21/2018 10:54:00 PM Rating: 5