ஜனாதிபதி ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் - பிரதமர் ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுவின் கூட்டத்தில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சிறிசேனவின் கருத்திற்கு ஐக்கியதேசிய கட்சி உடனடியாக பதில் அளிக்கவேண்டும் என இளம் நாடாளுமன்ற விடுத்த வேண்டுகோளிற்கு பதில் அளிக்கையிலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கருத்திற்கு பதில் அளிப்பது குறித்து கவனம் செலுத்துவதற்கு பதில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுயலவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் - பிரதமர் ரணில் ஜனாதிபதி ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் - பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 5/31/2018 05:38:00 PM Rating: 5