தமிழ்நாடு சுடுகாடுதான் ரஜினிகாந்த் ஆவேசம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் உள்ளே நுழைந்ததாக ரஜினிகாந்த் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். 

அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக அவர் முன்னர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அப்போது அவர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். 

காவல்துறையினர், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே.

காவல்துறையினரை அவர்கள் முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்.

என ரஜினிகாந்த் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்.

தமிழ்நாடு சுடுகாடுதான் ரஜினிகாந்த் ஆவேசம் தமிழ்நாடு சுடுகாடுதான் ரஜினிகாந்த் ஆவேசம் Reviewed by Vanni Express News on 5/31/2018 03:15:00 PM Rating: 5