இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்பது தெரிந்ததே.
உடல்பரிசோதனை மட்டுமின்றி அவர் அமெரிக்கா மற்றும் கனடாவின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியாகின.

எஸ்கலேட்டரில் ரஜினி நின்ற இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் அவருடைய அட்டகாசமான இன்னொரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் கோட் சூட் அணிந்து ரஜினிகாந்த் ஸ்டைலாக நிற்பது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது. இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் மிக வேகமாக வைரலாகி வருவதோடு, ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து அதிகளவில் ஷேர் செய்வதால் டுவிட்டர் டிரெண்டில் இந்திய அளவில் முதலிடத்தில் சில மணிநேரங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படம் Reviewed by Vanni Express News on 5/04/2018 04:48:00 PM Rating: 5